போயஸ் கார்டன் பகுதியில் ரஜினி வாக்கிங்: வைரலாகும் வீடியோ

போயஸ் கார்டன் பகுதியில் ரஜினி வாக்கிங்: வைரலாகும் வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'அண்ணாத்த' திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை திரைப்படக் கல்லூரியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் ராஜேஷ் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதற்கான புகைப்படம் வெளியாகியிருந்தது. அதை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர் ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் தனக்கே உரிய வேக நடையுடன் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர்கள் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in