பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்கள்: இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி

பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்கள்: இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்தை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பத்திரமாக அழைத்து சென்ற காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி புகைப்படம் எடுத்து கொண்டார் நடிகர் ரஜினி.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்று மீண்டும் அவரை இல்லத்திற்கு அழைத்து செல்வதற்காக காவல்துறை சார்பில் சிறப்பு கான்வாய் ஏற்பாடு செய்யப்பட்டது.

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ரவி அபிராம் உத்தரவின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான காவல்துறையினர் கான்வாய் மூலம் நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் இருந்து பத்திரமாக அழைத்து சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் உதவி ஆய்வாளர் மருது மற்றும் காவலர்களை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த்துடன் காவலர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in