விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் ரஜினி... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘லியோ’
‘லியோ’

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் போட்டியாக நடிகர் ரஜினி களமிறங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், முதல் நாள் வெளியீட்டின்போது திரையரங்குகளில் போலீஸ் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் போட்டியாக நடிகர் ரஜினிகாந்த்தின் வெற்றிப்படமான ‘பாட்ஷா’ படத்தைத் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியிருக்கிறது.

 லியோபடத்தில் விஜய்- த்ரிஷா
லியோபடத்தில் விஜய்- த்ரிஷா

'லியோ’ படத்திற்கு உலகளவில் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால், பல திரையரங்குகளில் ’பாட்ஷா’ படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். ஆனால், திருப்பூர் சக்தி சினிமாஸ் மட்டும் ’பாட்ஷா’ படத்தை மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். ’லியோ’ பட வெளியீட்டின் போது ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்வதெல்லாம் தேவையில்லாதது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in