ரஜினி சரிதம் - 37: திருமண பந்தம் தந்த மாற்றம்!

ரஜினி சரிதம் - 37:
திருமண பந்தம் தந்த மாற்றம்!
நெற்றிக்கண் படத்தில்...

திருப்பதி ஏழுமலையான் சன்னிதியில், புலர்காலைப் பொழுதில் சுப்ரபாதம் இசைப்பது வழக்கம். ரஜினியும் லதாவும் திருமண பட்டாடைகளை உடுத்தி அதிகாலை 3 மணிக்கெல்லாம் சன்னிதிக்கு வந்துவிட்டார்கள். அங்கு வெகுசில உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே குழுமியிருந்தனர். அதிகாலை 3.30 மணிக்கு சுப்ரபாதம் ஒலிக்க... ரஜினி - லதா திருமணம் இனிதே நடந்தது. ரஜினி தாலி கட்டியதும், அவருடைய காலைத் தொட்டு வணங்கினார் லதா. தொடர்ந்து, இரண்டு குடும்பத்து பெரியவர்களிடமும் மணமக்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாலையும் கழுத்துமாக சன்னிதியைவிட்டு வெளியே வந்தபோது... திடீரென அங்கு வந்த ஐந்தாறு செய்தியாளர்களும் சில போட்டோகிராபர்களும் அவர்களைப் படமெடுக்க முன்னேறி வந்துவிட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று காரில் ஏறி இருவரும் சென்னைக்குச் சிட்டாய்ப் பறந்துவிட்டார்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in