‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!

‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!

‘லவ் டுடே’ படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், யோகிபாபு, ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார்.

‘லவ் டுடே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதீப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது, அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு , அந்த கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் அன்பு. என்ன ஒரு ஆளுமை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லவ் டுடே’ படம் பார்த்து எனக்கு வாழ்த்து சொன்னார். நீங்க சொன்ன வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார்” என தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியையும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in