நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினி, திரையுலகினர் நேரில் கண்ணீர் அஞ்சலி

நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினி, திரையுலகினர் நேரில் கண்ணீர் அஞ்சலி

உடல் நலக்குறைவால் மரணமடைந்த நடிகை மீனாவின் கணவரின் உடலுக்கு நடிகர் ரஜினி காந்த் உள்பட திரையுலகினர் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு மனைவி மீனாவை மட்டுமின்றி திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனாவின் வீட்டில் கணவரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவர்கள் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார். அவரது உடல் பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in