‘தி லெஜண்ட்’ - அமிதாப் பச்சன் மீது அன்பினைப் பொழிந்த ரஜினியின் ட்வீட்!

‘தி லெஜண்ட்’ - அமிதாப் பச்சன் மீது அன்பினைப் பொழிந்த ரஜினியின் ட்வீட்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ தி லெஜண்ட்... எப்போதும் என்னை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒருவர். 80வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோவான, எனது அன்பான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் நிறைய அன்புடனும் வாழ்த்துகளுடனும்” என தெரிவித்துள்ளார்

அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து பகிர்ந்துள்ள இந்திய பிரதமர் மோடி, “அமிதாப் பச்சனுக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துகள். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து மகிழ்விக்கும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in