போயஸ் கார்டன் இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் ரஜினி!

போயஸ் கார்டன் இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் ரஜினி!

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.

75-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அண்மையில் விடுத்தார். அனைவரின் வீடுகளிலும் மூன்று நாட்கள் அதாவது, ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்றி பாஜகவினர் பல்வேறு இடங்களில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். மேலும், கோவையில் உள்ள சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூன்று வண்ணங்களில் ஜொலித்தது. இதேபோல் முக்கிய அரசு அலுவலகங்கள் மூன்று வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பல நடிகர், நடிகைகள் தங்களது சமூகதலைதள முகப்பு பக்கத்தின் டிபி-யை மாற்றி தேசியக்கொடியை வைத்துள்ளனர்.

இதனிடையே, பிரதமரின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர்.

இதேபோல், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.

இதனிடையே, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தின் வாயிலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in