ரஜினி கொடுத்த திருமண பரிசால் நெகிழ்ந்த நயன்தாரா!

ரஜினி கொடுத்த திருமண பரிசால் நெகிழ்ந்த நயன்தாரா!

இன்று இணையம் முழுக்க விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் பேசு பொருளாகி உள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் இவர்கள் திருமணம் இன்று சினிமா நட்சத்திரங்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ள நடந்து முடிந்திருக்கிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் மணிரத்தினம், கெளதம் மேனன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலில் இருந்து இன்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடந்திருக்கிறது.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் மணமகள் நயன்தாரா தரப்பில் இருந்து விலையுயர்ந்த ஆடம்பரமான பரிசுகள் சென்றிருக்கின்றன. அதேபோல, மணமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன் தரப்பில் இருந்து, முப்பது சவரன் தங்க நகைகள் மணமக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க கண்ணாடி மண்டபத்திலேயே அமைத்திருக்கிறது இவர்களது மண்டப வடிவம். கல்யாணம் நடக்கும் ஹோட்டலின் இருநூறுக்கும் மேற்பட்ட அறைகளை விக்கி- நயன் தரப்பு இரண்டு நாட்களுக்கு பதிவு செய்திருக்கிறது. நயன்தாரா இன்று அணிந்திருந்த சிவப்பு நிற புடவையும் விக்னேஷ் சிவனின் உடைகளையும் வடிவமைத்தவர்கள் கத்ரீனா கைஃப்- விக்கி கெளஷல், விராட் - அனுஷ்கா ஷர்மா நட்சத்திர தம்பதிகளின் கல்யாணத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த ஷாதி ஸ்க்காவ்ட் தான் இந்த தம்பதிகளுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து தனிப்பட்ட பரிசுகளையும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தரப்பு கொடுத்திருக்கிறது. திருமண வீடியோ முழுக்க நெட்ஃபிலிக்ஸ் கைவசம் இருப்பதால் மீடியாக்கள் மற்றும் வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் புகைப்படங்கள், வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் முடிந்ததும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் இயக்குநர் விக்னேஷ் சிவன் புகைப்படங்களை பகிர்ந்தார். அதில், 'நயன் மேம்மில் இருந்து, காதம்பரி, அதில் இருந்து தங்கமே, என் பேபி இப்போது என் உயிர் இனி எப்போதும் என் கண்மணி, மனைவி' என காதலோடு விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in