உயிரிழந்த நடிகர் அஜித் ரசிகர் குடும்பத்திற்கு உதவிய ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள்

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்உயிரிழந்த நடிகர் அஜித் ரசிகர் குடும்பத்திற்கு உதவிய ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள்

'துணிவு' திரைப்படம் பார்க்கச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த பரத்குமார் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைபடத்தை பார்க்கச் சென்ற சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரத்குமார் என்ற இளைஞர் லாரியின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஜனவரி 11-ம் தேதி அவர் உயிரிழந்தார். 

உயிரிழந்த பரத்குமார் குடும்பத்தினர் தங்களுக்கு உதவுமாறு நடிகர் அஜித்திற்கு கோரிக்கை வைத்தும் அவர் கண்டுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ரூ.25 ஆயிரம் மற்றும் பரத் குமார் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ரமேஷ் கோவிந்தராஜ், ‘’ நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிய 'துணிவு' திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகர் பரத்குமார் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் ரஜினி ரசிகர் மன்றம் மூலம் செய்து கொடுப்போம் ‘’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in