ரஜினி, விஜய் பட தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார்

ரஜினி, விஜய் பட தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார்

ரஜினி, விஜய் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டி.ராமராவ் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இயக்குநரும் பிரபல தயாரிப்பாளருமான டி.ராமராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, அஜய் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

70க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களை இயக்கி உள்ள இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பல படங்களை தயாரித்தும் உள்ளார். தமிழில் சிவாஜி, சாவித்ரி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நவராத்திரி படத்தை தெலுங்கில் சாவித்ரி மற்றும் நாகேஷ்வர ராவை வைத்து இயக்கி இயக்குநராக அறிமுகமானாவர் இயக்குநர் டி.ராமராவ்.

ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன், அதிசய பிறவி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். விஜய்யின் யூத், விக்ரமின் தில், ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், விஷாலின் மலைக்கோட்டை உள்ளிட்ட சில தமிழ் படங்களை தயாரித்துள்ள இத்தனை பெரிய சினிமா ஆளுமை இன்று மறைந்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பல பிரபலங்கள் டி.ராமராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in