தந்தை - மகளாக நடிக்கும் டாக்டர் ராஜசேகர், ஷிவானி

ஷிவானி
ஷிவானி

டாக்டர் ராஜசேகரின் அடுத்தப் படத்தில் அவர் மகள் ஷிவானி, ராஜசேகரின் மகளாகவே நடிக்கிறார்.

தமிழில், பாரதிராஜா இயக்கிய 'புதுமைப் பெண்', 'புதிய தீர்ப்பு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். பிறகு தெலுங்குக்கு சென்ற அவர், அங்கு முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் தெலுங்கில் நடித்த ’நான்தான்டா போலீஸ்’ டப் செய்யப்பட்டு, தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிகை ஜீவிதாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷிவானி, சிவாத்மிகா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவரும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

ராஜசேகர், ஷிவானி
ராஜசேகர், ஷிவானி

இந்நிலையில் ராஜசேகர், அடுத்து ‘சேகர்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 91-வது படம். இதில், ராஜசேகரின் மூத்த மகள் ஷிவானி ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் படத்திலும் அப்பா, மகளாகவே நடிக்கின்றனர். ஜீவிதா ராஜசேகர் திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.

படம் பற்றி ஜீவிதா ராஜசேகர் கூறும்போது, “ராஜசேகருக்கும் ஷிவானிக்கும் இடையேயான காட்சிகள் பெரிய ஈர்ப்பைத் தரும் வகையில் இருக்கும். அவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ, அப்படியேதான் படத்திலும் வருகிறார்கள். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

இதில் டாக்டர் ராஜசேகருடன், ஆத்மியா ராஜன், அபினவ் கோமதம், கிஷோர், சமீர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in