‘புஷ்பா’ இந்தியில் ஹிட்டாக ராஜமவுலி சொல்லும் காரணம்!

‘புஷ்பா’ இந்தியில் ஹிட்டாக ராஜமவுலி சொல்லும் காரணம்!

`புஷ்பா' படம் இந்தியில் ஹிட்டாவதற்கு என்ன காரணம் என்று இயக்குநர் ராஜமவுலி தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘புஷ்பா’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்தனர். சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கரோனா காலக்கட்டத்திலும் அதிக வசூலை குவித்த படம் இது.

புஷ்பா - அல்லு அர்ஜுன்
புஷ்பா - அல்லு அர்ஜுன்

இந்தியில் இந்தப் படத்தின் வசூலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் 2-ம் பாகம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படம் இந்தியில் ஹிட்டானதற்கு என்ன காரணம் என்று இயக்குநர் ராஜமவுலி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘இந்தி சினிமா மண் சார்ந்த படங்களை சமீபகாலமாக எடுக்கவில்லை. அவர்கள் ஃபீல் குட் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் மண் சார்ந்த படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் 'புஷ்பா' படம் வந்ததால் அது அவர்களுக்குப் பிடித்துவிட்டது. இதுதான் அந்தப் படம் இந்தியில் ஹிட்டாக காரணம்’ என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in