நடிகை ஷில்பா ஷெட்டி பெயரில் சொத்துகளை மாற்றியது ஏன்?

நடிகை ஷில்பா ஷெட்டி பெயரில் சொத்துகளை மாற்றியது ஏன்?

தனது மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு ரூ.38.5 கோடி சொத்துகளை ராஜ்குந்த்ரா மாற்றியுள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து மொபைல் ஆப் மூலம் பதிவேற்றி கோடிக் கணக்கில் சம்பாதித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா
ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா

ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா உட்பட சிலர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தால், நடிகை ஷில்பா ஷெட்டி அப்செட்டானார். அவர் கதறி அழுததாக அப்போது செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ராஜ் குந்த்ரா, தனது பெயரில் இருந்த ரூ. 38.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா
ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா

மும்பை, ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5 பிளாட்களை, நடிகை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு அவர் மாற்றியுள்ளார். இதற்கான பத்திரப்பதிவு, கடந்த 21-ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த இடத்தின் மதிப்பு, சதுரடி அடி ரூ.65,000 ஆகும். ஆபாச பட வழக்கு காரணமாக, நடிகை ஷில்பா ஷெட்டியின் பாதுகாப்பு மற்றும் அவர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த சொத்து மாற்றம் நடத்தப்பட்டுள்ளதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in