ராம் படத்துக்காக ரூ.1 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் செட்!

சென்னை ரெட் ஹில்சில் அமைக்கப்பட்டுள்ளது
ராம் படத்துக்காக ரூ.1 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் செட்!

ராம் இயக்கும் படத்துக்காக, சென்னை அருகே ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட ரயில்வே ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டுள்ளது.

மம்முட்டி, அஞ்சலி உட்பட பலர் நடித்த ’பேரன்பு’ படத்தை அடுத்து ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார். அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். சூரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புவின் ’மாநாடு’ படத்தைத் தயாரித்துள்ள சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தனுஷ்கோடியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இப்போது குமுளியில் நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையிலும் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக சென்னை ரெட் ஹில்ஸ் அருகே ரூ.1 கோடி செலவில், ரயில்வே ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு முக்கியம் என்பதால் இந்த அரங்கத்தை பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். குமுளி ஷெட்யூலை முடித்துவிட்டு படக்குழு இங்கு படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in