மீண்டும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான்

மீண்டும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான்

2016-ம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இத்திரைப்படத்தில் ரகுமான் நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘மாஃபியா’, ‘நரகாசுரன்’ படங்களை இயக்கினார் கார்த்திக் நரேன். இதில் ‘நரகாசுரன்’ திரைப்படத்தில் கார்த்திக் நரேனுக்கும் அத்திரைப்படத்தைத் தயாரித்த கௌதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இத்திரைப்படம் வெளியாகாமல் தடைபட்டு நின்றது. அதன் பிறகு ‘மாஃபியா’ திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். தற்போது தனுஷ் நடிப்பில் ‘மாறன்’ திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் தனது புதிய படத்தைத் தொடங்கவிருக்கிறார் கார்த்திக் நரேன். அத்திரைப்படத்தில், தனது முதல் படக் கதாநாயகனான ரகுமான் மற்றும் அதர்வாவை நடிக்க வைக்கவுள்ளார் நரேன். அதோடு, அத்திரைப்படத்தில், ரகுமான் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு வேடம் வில்லன் வேடமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்துக்குப் பிறகே ‘மாஃபியா-2’ திரைப்பட வேலைகளை கார்த்திக் நரேன் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in