“தகுந்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தேன்!”

தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கும் ராகினி திவேதி
நடிகை ராகினி திவேதி
நடிகை ராகினி திவேதி

தமிழ்ப் படங்களில் மீண்டும் நடிப்பதற்குச் சரியான கதாபாத்திரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று நடிகை ராகினி திவேதி தெரிவித்துள்ளார்.

த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தைத் தொடர்ந்து கே.திருஞானம் இயக்கும் படம், ’ஒன் 2 ஒன்’. இதில் சுந்தர்.சி நாயகனாக நடிக்கிறார். ஜோடியாக, கன்னட நடிகை ராகினி திவேதி நடிக்கிறார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வில்லன் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் மூலம், ராகினி திவேதி மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சுந்தர்.சி, ராகினி திவேதி
சுந்தர்.சி, ராகினி திவேதி

இவர், இதற்கு முன் சமுத்திரக்கனி இயக்கிய ’நிமிர்ந்து நில்’படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார். இந்தப் படம் 2014-ம் ஆண்டு வெளியானது. 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

இதுபற்றிப் பேசியிருக்கும் ராகினி, “தமிழ்ப் படங்களில் மீண்டும் நடிப்பதற்கு சரியான கதாபாத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் படம் எனக்குச் சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதில் ஹோம்லியான, புத்திசாலித்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். த்ரில்லர் படம். பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே அழைத்துவர வைக்கும். நாளை முதல் சென்னையில் ஷூட்டிங். முதல் ஷெட்யூலில் 30 நாட்கள் பங்கேற்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in