ஆவேச லுக்கில் அதிரடி லாரன்ஸ்: மிரட்டும் ’ருத்ரன்’ பர்ஸ்ட் லுக்

ஆவேச லுக்கில் அதிரடி லாரன்ஸ்: மிரட்டும் ’ருத்ரன்’ பர்ஸ்ட் லுக்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட பல படங்களை தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ’ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

இங்கு ராகவா லாரன்ஸ், சரத்குமார் மோதும் சண்டைக் காட்சி 10 நாட்கள் படமாக்கப்படுகிறது. ஸ்டன் சிவா இதை அமைக்கிறார். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப் பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. கையில் ஆயுதத்துடன் லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்துகிடப்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் இருக்கிறது. அதில் படம், கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in