ராகவா லாரன்ஸின் ’ருத்ரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸின் ’ருத்ரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. கையில் ஆயுதத்துடன் லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்துகிடப்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியையும் லாரன்ஸின் புதிய லுக்கையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in