கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் தம்பி!

ராகவா லாரன்ஸ், எல்வின், கே.எஸ்.ரவிகுமார்
ராகவா லாரன்ஸ், எல்வின், கே.எஸ்.ரவிகுமார்

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி, நாயகனாக அறிமுகமாகும் படத்தின் பூஜை இன்று நடந்தது.

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின். இவர் ’காஞ்சனா 2’ படத்தில், லாரன்ஸுடன் தொடக்க பாடலில் நடனம் ஆடியிருந்தார். இதையடுத்து இவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கடந்த 2020 -ம் ஆண்டு அறிவித்திருந்தார் லாரன்ஸ். அந்தப் படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். கரோனா காரணமாக அந்தப் படம் உடனடியாகத் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் எல்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அலுவலக பூஜை இன்று நடந்தது.

எல்வின், ராகவா லாரன்ஸ், கே.எஸ்.ரவிகுமார், டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்
எல்வின், ராகவா லாரன்ஸ், கே.எஸ்.ரவிகுமார், டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்

இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். லாரன்ஸ் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் பூஜை தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள லாரன்ஸ், தன் தம்பிக்கு உங்கள் ஆசிர்வாதம் தேவை என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in