அன்பறிவ் விலகியதால் `துர்கா’வை இயக்குவது இவர்தான்!

அன்பறிவ் விலகியதால் `துர்கா’வை இயக்குவது இவர்தான்!

அன்பறிவ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட `துர்கா' படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்க இருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து, இயக்கும் ’ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு ‘அதிகாரம்’, ‘துர்கா’ படங்களில் கவனம் செலுத்துகிறார் லாரன்ஸ். ‘துர்கா’ படத்தை ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரட்டையர்களான இவர்கள், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘24’, ‘கைதி’, ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘மாஸ்டர்’ உள்பட பல படங்களில் சண்டை இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள். இந்தி, தெலுங்கு படங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ’துர்கா’ படத்தை இயக்குவதில் இருந்து திடீரென விலகினர்.

முன்பே ஒப்புக்கொண்ட படங்களின் வேலை காரணமாக இந்தப் படத்தை இயக்க முடியவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர். இதனால் இந்தப் படத்தை யார் இயக்குவது என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தின் வில்லன் ராம் இதில் வில்லனாக நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in