வெற்றிமாறன் கதையில் லாரன்ஸ்: அப்டேட் வெளியிட்ட படக்குழு

வெற்றிமாறன் கதையில் லாரன்ஸ்: அப்டேட் வெளியிட்ட படக்குழு

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'அதிகாரம்' படம் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் கதையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ’அதிகாரம்’. இதை, துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இவர் ‘எதிர்நீச்சல்’, காக்கிச்சட்டை, ‘கொடி’ மற்றும் ‘பட்டாஸ்’ படங்களை இயக்கியவர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் - இந்தியா படமாக உருவாகிறது. தமன் இசையமைக்கிறார். படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசனும் வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கதிரேசன், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் வெற்றிமாறன், துரை செந்தில்குமார்
கதிரேசன், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் வெற்றிமாறன், துரை செந்தில்குமார்

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பற்றி படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இதன் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in