ராசாக்கண்ணு மனைவியிடம் ஆசிபெற்ற ராகவா லாரன்ஸ்

ராசாக்கண்ணு மனைவியிடம் ஆசிபெற்ற ராகவா லாரன்ஸ்

‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைச் சம்பவத்தின் மையப்புள்ளியான ராசாக்கண்ணு, பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதையறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்குத் தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளை நேரில் சென்று பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை. ஆனால், உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

மேலும், எனக்கு அம்மா மற்றும் கடவுள் மீதுதான் மிகுந்த நம்பிக்கை உள்ளது. சூர்யா அவர்களின் முயற்சியால்தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.