வெப் தொடராகிறது எம்.ஜி.ஆர்- எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவம்

வெப் தொடராகிறது எம்.ஜி.ஆர்- எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவம்

நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் வெப் தொடராகிறது.

பிரபல நடிகர் எம்.ஜி.ஆரும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் எம்.ஜி.ஆரைச் சுட்டார், எம்.ஆர்.ராதா. 1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பானது.

இந்த சம்பவம் பற்றி பின்னர் கூறிய எம்.ஆர்.ராதா, ``நானும் எம்.ஜி.ஆரும் நண்பர்கள். எங்களுக்குள் சிறு கோபம். செல்லமாகச் சண்டை போட்டுட்டோம். அந்த நேரத்தில் கம்பு இருந்திருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்'' என்றார்.

இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை வெப் தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in