`சினிமாவுக்கு வந்தபோது பிளாஷ்டிக் சர்ஜரி செய்யச் சொன்னார்கள்'- ராதிகா ஆப்தே

`சினிமாவுக்கு வந்தபோது பிளாஷ்டிக் சர்ஜரி செய்யச் சொன்னார்கள்'- ராதிகா ஆப்தே

``சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னை பலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொன்னார்கள்'' என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

தமிழில், தோனி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இந்தியில் ஃபோரன்சிக், விக்ரம் வேதா ரீமேக் படங்களில் நடித்து வரும் அவர், சினிமாவுக்கு வந்த புதிதில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள தன்னைப் பலர் அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ``சினிமாவுக்கு வந்த புதிதில் முதலில் அழுத்தம் இருந்தது. என்னைச் சந்தித்த சிலர், முகத்திலும் உடலிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்படி கூறினார்கள். முதலில், மூக்கை சர்ஜரி மூலம் மாற்றச் சொன்னார்கள். பிறகு தாடையில். மார்பகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். பின் கன்னங்களில், கால்களில் சொன்னார்கள். முடியில் வண்ணம் தீட்டச் சொன்னார்கள். 30 வருடங்களாக வண்ணம் தீட்டியதில்லை.

இதைக் கேட்டபின் எனக்கிருந்த அழுத்தம் மாறி, கோபம்தான் வந்தது. மற்றவர்கள் செய்யும் வேலைகளை, நானும் ஏன் செய்ய வேண்டும்? இவை அனைத்தும் முன்பை விட என் உடலை இன்னும் அதிகமாக நேசிக்க உதவியது. அதே நேரம் எனக்கு வயதானால், அதை ஏற்கிறேன். வண்ணங்களால் அதை மாற்ற முயற்சிக்க விரும்பவில்லை. மாற்றுவது இயற்கைக்கு எதிரானது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in