ஓடிடி-யில் அறிமுகமாகிறார் நடிகை ராஷி கண்ணா

ஓடிடி-யில் அறிமுகமாகிறார் நடிகை ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா, அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் ’ருத்ரா’ என்ற வெப் தொடர் மூலம் ஓடிடி-யில் அறிமுகமாகிறார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணா, அஜய் ஞானமுத்து இயக்கிய ’இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து ஜெயம் ரவியுடன் ’அடங்கமறு’, விஷாலுடன் ’அயோக்யா’, விஜய் சேதுபதியுடன் ’சங்கத்தமிழன்’, சுந்தர்.சியின் ’அரண்மனை 3’ படங்களில் நடித்துள்ளார். கார்த்தியின் ’சர்தார்’, தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது நாக சைதன்யாவுடன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக மாஸ்கோ சென்றுள்ளார்.

ருத்ரா- ராஷி கண்ணா, அஜய்தேவ்கன்
ருத்ரா- ராஷி கண்ணா, அஜய்தேவ்கன்

இதற்கிடையே அவர் பிரபல இந்தி ஹீரோ அஜய் தேவ்கனுடன் ’ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதன் மூலம் அஜய் தேவ்கனும் ராஷி கண்ணாவும் ஓடிடி-யில் அறிமுகமாகிறார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த கிரைம் தொடரில், ஈஷா தியோல், அதுல் குல்கர்னி, அஸ்வினி கல்சேகர், அசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், வங்காள மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜய் தேவ்கன், ’ருத்ரா மூலமாக டிஜிட்டல் உலகத்துக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் என்னைக் கவர்ந்தது, இந்த ஸ்கிரிப்ட்தான். ரசிகர்கள் கண்டிப்பாக இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்’எனத் தெரிவித்துள்ளார். இந்த வெப் சீரிஸை ராஜேஷ் மபுஸ்க் இயக்கியுள்ளார்.

நடிகை ராஷி கண்ணா, ராஜ் மற்றும் டீகே இயக்கும் வெப் தொடரிலும் ஷாகித் கபூர், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in