
அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுக்கு காஸ்ட்லியான கிஃப்ட்டை பிரபல நடிகை வழங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர், ராஷி கண்ணா, ’இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழுக்கு வந்த இவர்,அடுத்து ’அடங்கமறு’, ’அயோக்யா’, ’சங்கத்தமிழன்’, ’அரண்மனை 3’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இப்போது கார்த்தியுடன் ’சர்தார்’, தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அஜய் தேவ்கனுடன் அவர் நடித்துள்ள ’ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’ என்ற வெப் தொடர், ஹாட் ஸ்டாரில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை ராஷி கண்ணா, அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுக்கு ஆச்சரியமான கிஃப்ட் ஒன்றை அளித்துள்ளார். அந்த காஸ்ட்லி கிஃப்ட்,பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார். இதன் மதிப்பு ரூ.1.40 கோடி என்று கூறப்படுகிறது. சொகுசு கார் வாங்க வேண்டும் என்ற அம்மாவின் நீண்ட நாள் விருப்பத்தை நடிகை ராஷி கண்ணா நிறைவேற்றி இருக்கிறார்.