யூடியூப் சேனல் தொடங்கினார் ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா, ரசிகர்களை நேரடியாக தொடர்புகொள்ள யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

நடிகை ராஷி கண்ணா, அஜய் ஞானமுத்து இயக்கிய ’இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து ஜெயம் ரவியுடன் ’அடங்கமறு’, விஷாலுடன் ’அயோக்யா’, விஜய் சேதுபதியுடன் ’சங்கத்தமிழன்’, சுந்தர்.சியின் ’அரண்மனை 3’ படங்களில் நடித்துள்ளார்.

கார்த்தியின் ’சர்தார்’, தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது நாக சைதன்யாவுடன் ’தேங்க் யூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்புக்காக அவர் மாஸ்கோ சென்றுள்ளார். அவர் இந்தி ஹீரோ அஜய் தேவ்கனுடன் நடித்துள்ள ’ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’ என்ற வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், அவர் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

அதில், “இது அறிமுக வீடியோ. இதில் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசப்போகிறேன், என் வீடியோவை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ள ராஷி கண்ணா, “வழக்கம்போல, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க” என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in