நான் அப்படிச் சொன்னேனா?-ராஷி கண்ணா விளக்கம்

நான் அப்படிச் சொன்னேனா?-ராஷி கண்ணா விளக்கம்

``தென்னிந்திய சினிமா பற்றி நான் சொன்னதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை'' என்று நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் ராஷிகண்ணா. தமிழில், இமைக்காநொடிகள், அடங்கமறு, துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்திலும் ராசி கண்ணா நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தென்னிந்திய படங்களில் பெண்களை கவர்ச்சிப் பொம்மைகளாகவே கருதுகிறார்கள் என்றும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை உருவாக்குவதில்லை என்றும் அவர் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ராஷி கண்ணாவை ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில், இது குறித்து நடிகை ராஷி கண்ணா விளக்கம் அளித்துள்ளார். அதில், ``தென்னிந்திய சினிமா பற்றி நான் சொன்னதாக தவறான, புனையப்பட்ட கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தயவு செய்து அதை நிறுத்துங்கள். நான் நடிக்கும் ஒவ்வொரு மொழி படத்தின் மீதும் எனக்கு அதிக மரியாதை உண்டு'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in