அமலாபாலைத் தொடர்ந்து ராய் லட்சுமிக்கும் கோல்டன் விசா

நடிகை ராய் லட்சுமி
நடிகை ராய் லட்சுமி

பார்த்திபன், அமலாபாலைத் தொடர்ந்து நடிகை ராய் லட்சுமிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 வருடம் ஐக்கிய அமீரகக் குடிமகன்களாகக் கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

நடிகை த்ரிஷாவுக்கும் கடந்த மாதம் இந்த விசா வழங்கப்பட்டது. இதைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை அவர் பெற்றார். சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன், நடிகை அமலாபால் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள நடிகை ராய் லட்சுமி, இந்த கவுரவத்தை வழங்கியதற்காக, அவர் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in