ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைப்பு

கரோனா கட்டுப்பாடுகளே காரணம் என தகவல்
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைப்பு

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் , சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் நடிப்பில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கைச் சித்திரமான இந்தப் படம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படத்தை ஜனவரி 7-ம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கெனவே தேதி குறித்திருந்தார்கள். இதற்கான ப்ரொமோஷன் வேலைகள்கூட முடிந்துவிட்ட நிலையில், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை தமிழக அரசு இன்று முதல் கடுமையாக்கி இருக்கிறது.

இதுவரை தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் அது 50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் ஆர்ஆர்ஆர் படத்தை திட்டமிட்டபடி வரும் 7-ம் தேதி ரிலீஸ் செய்தால் எதிர்பார்த்த வசூலை எடுப்பது சிரமம் என்பதால், ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருப்பதாக ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவித்துள்ளது.

நிலைமைகள் சகஜமான பிறகு அநேகமாக ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு சமயத்தில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in