6 மொழிகளில் வெளியாகிறது மாதவனின் ’ராக்கெட்ரி’

ராக்கெட்ரி- சிம்ரன், மாதவன்
ராக்கெட்ரி- சிம்ரன், மாதவன்

தான் இயக்கி நடித்துள்ள ’ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை, நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து, நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள படம், ’ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்'. இந்தப் படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார். நம்பி நாராயணன், உளவுத் துறையால் கைதுசெய்யப்பட்ட பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

போஸ்டர்
போஸ்டர்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்ய நாடுகளில் நடந்துள்ளது.

டிரிகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் மாதவன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 1-ம் தேதி உலகம் முழுதும் இப்படம் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in