ஹிரித்திக் ரோஷன் மாதிரி ஆகணும்: மாதவன் ஆசை

ஹிரித்திக் ரோஷன், மாதவன்
ஹிரித்திக் ரோஷன், மாதவன்

கேத்ரினாவுடன் நடிக்க, ஹிரித்திக் ரோஷன் போல உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஆசைப்படுவதாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன் ’ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் இது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அம்ரிகி பண்டிட், தோக்கா ரவுண்ட் டி கார்னர் ஆகிய இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

மாதவன், ஹிரித்திக் ரோஷன்
மாதவன், ஹிரித்திக் ரோஷன்

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்தி ஹீரோ ஹிரித்திக் ரோஷனை புகழ்ந்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: “நானும் ஹிரித்திக் ரோஷனும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவுக்கு வந்தோம். அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களைப் போல நானும் நடிக்க விரும்புகிறேன். அவர் மீது எனக்கு எப்போதும் அபிமானம் உண்டு. அவர் இப்போதும் கிரேக்க கடவுளைப் போல இருக்கிறார். அற்புதமான செயல்களைச் செய்கிறார். ஆனால், நான் வெறும் ஆசையை மட்டும் வைத்திருப்பது உதவாது.

கேத்ரினாவுக்கு ஜோடியாக நடிக்க அவரைப் போல, ஃபிட்டாக இருக்க வேண்டும். ஆனாலும் எனக்கு கிடைத்தவற்றில் நான் நன்றாக இருக்கிறேன். என் பலத்துக்கு ஏற்றக் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன். நடிக்க வந்து சில வருடங்களுக்குப் பின், நடிப்பில், எந்த உணர்ச்சியையும் மிகைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்தேன். நான் நடிகராக எங்கும் பயிற்சிப் பெற்றதில்லை. ஆனால், கற்றுக்கொள்ளும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி. அதனால் நடிப்பு நுட்பமாக மாறுகிறது. இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது” இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in