'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’படத்தை யூடியூப்ல போடுங்களேன்’

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் காட்டம்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’படத்தை யூடியூப்ல போடுங்களேன்’
அரவிந்த் கேஜ்ரிவால்

``தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஏன் வரிவிலக்கு? எல்லோரும் பார்க்க வேண்டும் என்றால் யூடியூப்பில் பதிவேற்ற வேண்டியதுதானே?'' என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டப்பட்டனர். இதனால், லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர்.

அப்போது. காஷ்மீரில் பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் உயிர்பயத்துடன் வெளியேறிய சம்பவங்களை கொண்டு, தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் இந்தியில் உருவாகி இருக்கிறது. விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சில மாநிலங்கள் வரிச்சலுகை அளித்துள்ளன.

டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்கும்படி பாஜக கோரிக்கை வைத்தது. இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ’இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், யூடியூபில் பதிவேற்ற வேண்டியதுதானே? எல்லோரும் இலவசமாகவே பார்த்துவிடுவார்கள். ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள்? விவேக் அக்னிகோத்ரியிடம் சொல்லுங்கள், யூடியூப்பில் பதிவேற்றுவார். ஒரே நாளில் எல்லோரும் பார்த்துவிடுவார்கள்’ என்று காட்டமாகச் சொன்னார்.

Related Stories

No stories found.