
நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ மற்றும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் சாதனைப் படைத்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா உள்ளிடப் பலர் நடிப்பில் ‘புஷ்பா2’ திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அல்லு அர்ஜூன் பிறந்த நாளன்று ‘வேர் ஈஸ் புஷ்பா?’ என்ற டேக் லைனோடு புஷ்பா கதாபாத்திரத்திற்கான அறிமுக வீடியோ வெளியானது. வெளியான 24 மணி நேரத்திலேயே 57 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூ-ட்யூபிலும் இணையத்திலும் டிரெண்டிங்கில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் வெளியானது. ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இந்தப் புரோமோ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் உள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புடன் இத்தனை புரோமோஷன் செய்தும், ‘புஷ்பா2’ படத்தின் ஹிட் ரேட்டில் பாதியளவைக் கூட கடக்காததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘கங்குவா’ திரைப்படம் பத்து மொழிகளில் 3டி வடிவத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.