தமிழில் அறிமுகமாகும் 'புஷ்பா' பட பாடகி!

பாடகி இந்திராவதி சவுகான்.
பாடகி இந்திராவதி சவுகான்.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘புஷ்பா’. இதன் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்புப் பெற்ற நிலையில் இதில் இடம்பெற்றிருந்த ‘ஊ சொல்றியா’ பாடல் அனைத்து மொழிகளிலும் ட்ரெண்டானது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா அல்லு அர்ஜூனுடன் நடனமாடி இருப்பார்.

இந்தப் பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடியிருக்கு தெலுங்கில் இந்திராவதி சவுகான் பாடியிருப்பார். இவர் தற்போது தமிழிலும் பாடகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் பெருமாள் காசி இயக்கத்தில் ,எல்என்எச் கிரியேஷன்  கே.லட்சுமிநாராயணன் தயாரிப்பில் ’என்ஜாய்’  என்கிற படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். ‘சங்கு சக்கர  கண்ணு’  என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார். பாடலை விவேகா எழுதியிருக்கிறார். ரயான் இசையமைத்துள்ளார்.இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழில் பாடுவது பெரும் விருப்பமாகவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருவதாகவும் பாடகி இந்திராவதி சவுகான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in