தள்ளிப்போகிறதா ‘புஷ்பா2’ ரிலீஸ்?... காரணம் இதுதான்!

’புஷ்பா2’
’புஷ்பா2’

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருப்பதால் ரிலீஸ் தள்ளிப் போகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘புஷ்பா’. இதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’புஷ்பா2’ படத்தின் டீசர், பாடல்கள் எல்லாம் மாஸாக இருக்க படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இரண்டாம் பாகம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் எனவும் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...
’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...

ஆனால், திடீரென படத்தின் வெளியீடு தள்ளிப் போக அதிக வாய்ப்புள்ளது என செய்தி பரவியதால் ‘புஷ்பா’ ரசிகர்கள் அப்செட்! இந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது. இது குறித்து ‘புஷ்பா2’ வட்டாரத்தினர் தெரிவித்திருப்பதாவது, “சொன்னபடி, ‘புஷ்பா2’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பட ரிலீஸ் தள்ளிப் போகும் என்பதெல்லாம் வதந்தி. இந்த மாத இறுதிக்குள் அல்லு அர்ஜூனுக்கான படப்பிடிப்பு முடிந்துவிடும். மற்றவர்களுக்கான ஷூட் ஜூன் மாதம் முடிந்துவிடும். அதன் பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கும்.

ராஷ்மிகா
ராஷ்மிகா

‘புஷ்பா2’ படம் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதனால், அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் சிறப்பாகத் தர நினைக்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in