‘லைகர்’ படுதோல்வி: அதிரடி முடிவு எடுத்த விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத்!

‘லைகர்’ படுதோல்வி: அதிரடி முடிவு எடுத்த விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத்!

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’லைகர்’ படம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியானது. புரி ஜெகநாத் இயக்கிய இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாகி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இது, ஹீரோ விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி, கரண் ஜோஹர் ஆகியோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இதே டீம் இணைந்து ’ஜனகணமன’(JGM) என்ற படத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி இதை வெளியிட இருப்பதாகவும் அதன் டீசரையும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். இதில் விஜய்யின் ’வாரிசு’படத்தை இயக்கும் வம்சி பைடிபள்ளியும் தயாரிப்பாளராக இணைந்திருந்தார். லைகர் படத்தில் முதலீடு செய்திருந்த மை ஹோம் குரூப் என்ற நிறுவனமும் இணைந்திருந்தது.

இந்நிலையில் ’லைகர்’ படம் படுதோல்வி அடைந்ததால், மை ஹோம் குரூப் நிறுவனம் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா, இயக்குநர் புரி ஜெகநாத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பான் இந்தியா படமாக உருவாக இருந்த இதன் பட்ஜெட்டும் அதிகம் என்பதால், படத்தை நிறுத்திவிட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in