அடுத்தடுத்து மோதிய கார்கள்: ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல இந்திய பாடகர்

அடுத்தடுத்து மோதிய கார்கள்: ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல இந்திய பாடகர்

சாலை விபத்தில் அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பிரபல பாடகர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வய்ர் சிங். ‘மை டர்ன்’ என்ற ஆல்பத்தில் இடம்பெற்ற ’தேரே பினா’ பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பல்வேறு பாடல்களை ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர், தனது பாடல் கேரியரை மேம்படுத்துவதற்காக 9 வருடத்துக்கு முன் ஆஸ்திரேலியா சென்றார்.

அங்கு மெல்போர்ன் நகரில் வசித்து வந்த அவர், வழக்கம்போல தனது அலுவலகத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தவறான பாதையில் வேகமாக வந்த கார் ஒன்று, ஜீப் ஒன்றில் மோதி, சிங் சென்றுகொண்டிருந்த சாலைக்கு திரும்பியது. உடனடியாக அவர் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் சிங் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய ஜீப்பில் இருந்த பெண் படுகாயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை தவறான பாதியில் ஒட்டி வந்த 23 வயது இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பஞ்சாப் பாடகர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவர் ரசிகர்கள், நண்பர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in