4,000 தியேட்டர்களில் ரிலீசாகிறது புனித் ராஜ்குமாரின் `ஜேம்ஸ்'

4,000 தியேட்டர்களில் ரிலீசாகிறது புனித் ராஜ்குமாரின் `ஜேம்ஸ்'

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படமான `ஜேம்ஸ்' படம் 4 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமாருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். யாரும் எதிர்பாராத நிலையில், அண்மையில் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் நடித்த கடைசி படம் ஜேம்ஸ். இந்த படத்தை சேத்தன்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் புனித் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருடன் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதால் ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. வரும் மார்ச் 17ஆம் தேதி புனித் ராஜ்குமார் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ஜேம்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம். இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in