புனித் ராஜ்குமார் பிறந்த நாளில் ’ஜேம்ஸ்’ ரிலீஸ்

புனித் ராஜ்குமார் பிறந்த நாளில் ’ஜேம்ஸ்’ ரிலீஸ்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் 'ஜேம்ஸ்' அவரது பிறந்தநாளான வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு அவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போதும் அவர் நினைவிடத்தில் ரசிகர்கள், கூட்டம் கூட்டமாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக, ’ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமாருக்கு, அவர் அண்ணன் சிவராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அவரும் அவருடைய மற்றொரு சகோதரரான ராகவேந்திரா ராஜ்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இது, பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்தப் படம் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. கர்நாடகாவில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நாடு முழுவதும் நான்காயிரம் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in