மறைந்த நடிகா் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

மறைந்த நடிகா் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

மறைந்த நடிகர், புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு லால்பாக் பூங்காவில், 15-ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியில், கண்ணாடி மாளிகையில் நடிகர் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த 212-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்," ராஜ்குமார், புனித் ராஜ்குமாரின் சிலைகள், புனித் ராஜ்குமாரின் பூர்வீக வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானவர்கள் மலர் கண்காட்சியை காண வருவார்கள். மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதன்படி, கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ம் தேதி அவருக்கு விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் 10-வது நபர் புனித் ராஜ்குமார்’’ என்றார்.

இதையடுத்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in