சிறந்த திரைப்படம் ‘கூழாங்கல்’: விருது வழங்கி கெளரவிக்கிறது புதுச்சேரி அரசு!

சிறந்த திரைப்படம் ‘கூழாங்கல்’: விருது வழங்கி கெளரவிக்கிறது புதுச்சேரி அரசு!

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவித்திருக்கிறது புதுச்சேரி அரசு.

நயன்தார - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த திரைப்படம் ‘கூழாங்கல்’. தனது சொந்த வாழ்வில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கிய வினோத்ராஜ், முழுக்க முழுக்க புதுமுகங்களையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், ராட்டர்டாம் திரைப்பட விழாவில் ‘டைகர்’ விருதை வென்றது. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக ’கூழாங்கல்’ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் வினோத்ராஜுக்கு வரும் 9-ந்தேதி சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படவிருப்பதாக புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in