ஹாலிவுட் தரத்தில் உருவான த்ரில்லர் 'லாக்'

வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
ஹாலிவுட் தரத்தில் உருவான த்ரில்லர் 'லாக்'

‘அட்டு' படத்தை அடுத்து, இயக்குநர் ரத்தன் லிங்கா இயக்கும் படம், ’லாக்’. பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , ஆர்பிஜி ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இயக்குநர் ரத்தன் லிங்கா
இயக்குநர் ரத்தன் லிங்கா

காமக்கொடூரக் கொலைகாரர்கள் ஐந்து பேர் ஒரு பெண் மீது கண் வைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அந்தப் பெண் எப்படி தப்பிக்கிறாள், கொலையாளிகள் என்ன ஆனார்கள் என்பதுதான் படம்.

‘அடுத்தடுத்து முடிச்சுகள், திருப்பங்கள் எனக் கதை நகர்கிறது. ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது’ என்கிறது படக்குழு.

இதில் சுதிர் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக மது நடிக்கிறார். ஹரிணி, நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் உட்பட பலர் நடித்துள்ளனர். நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் செல்வா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியாகியுள்ளது. இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.