மாற்றுத்திறனாளிகளுக்கு விருதை சமர்பித்த ‘சைக்கோ’ பட தயாரிப்பாளர்

மாற்றுத்திறனாளிகளுக்கு விருதை சமர்பித்த ‘சைக்கோ’ பட தயாரிப்பாளர்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, 2021-ம் ஆண்டிற்கான இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடல் என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக இசைஞானி இளையராஜாவுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் என மூன்று விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் கலந்துகொண்டு, 2021 ஆண்டு பாடலுக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் அந்த விருதை அனைத்தும் பார்வைத்திறன் சவாலுள்ளவர்களுக்கு சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.