`வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு வாய்ப்பு'

வெற்றிமாறனின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கிய தாணு அறிவிப்பு
`வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு வாய்ப்பு'
கலைப்புலி எஸ் தாணுவிடம் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை பெறும், மேகலா சித்திரவேல்.

இயக்குநர் வெற்றிமாறனின் "நாம் அறக்கட்டளை” க்கு ஒரு கோடி நிதி கொடுத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

இயக்குநர் வெற்றிமாறன் ’நாம் அறக்கட்டளை’யை தொடங்கி இருக்கிறார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து, தங்கள் வலியை, பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்யும் ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்களை ஊடகத்துறையில் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் .

இதன் தொடக்க நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இந்த அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேலிடம் கொடுத்தார். இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்தார்.

‘நாம் அறக்கட்டளையை சார்ந்த ஆர்த்தி வெற்றிமாறன், வெற்றி துரைசாமி மற்றும் பாடத் திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ஃபாதர் ராஜா நாயகம் (லயோலா கல்லூரி ) ஆகியோர் உடன் இருந்தனர் .

Related Stories

No stories found.