அஜித்தின் 'துணிவு' படத்தை ஆந்திராவில் வெளியிடும் 'வாரிசு' தயாரிப்பாளர்

அஜித்தின் 'துணிவு' படத்தை ஆந்திராவில் வெளியிடும் 'வாரிசு' தயாரிப்பாளர்

ஆந்திராவில் நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்தை 'வாரிசு' பட தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜயின் 'வாரிசு', நடிகர் அஜித்தின் 'துணிவு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் சம அளவு தியேட்டர் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதற்கு 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்துதெலுங்கு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் வெளியாகிறது. தமிழகத்தில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 800-க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400-க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். இது வியாபாரம். என் படமும் பெரிய படமாக இருக்கும் நிலையிலும் நான் திரைகளுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் ஒருத்தருக்கான உரிமை கிடையாது தானே? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார். விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப் போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார். ஒரு தயாரிப்பாளராக, விஜய் படத்திற்கு அதிக திரையிடங்களைக் கோருகிறேன்” என்று கூறியிருந்தார்.

தமிழக அமைச்சராக உள்ள உதயநிதி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 'வாரிசு' படத்திற்கு எதிராக பயன்படுத்துகிறார் என்ற விமர்சனம் ஏற்கெனவே இருந்து வரும் நிலையில், தில் ராஜுவின் பேட்டி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஆந்திராவில் முக்கிய பகுதிகளில் அஜித் நடித்த 'துணிவு' படத்தின் வெளியீட்டு உரிமையை தில் ராஜு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ' துணிவு' படம் தெலுங்கில் ஆந்திராவில் தெலுஙகில் டப்பாக உள்ளது. இப்படத்தை விசாகப்பட்டினம், நிஜாம் பகுதிகளில் தில் ராஜு தான் விநியோகிக்க உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in