`ஆந்திராவில் `வாரிசு' 35% ரிலீஸாகும்; விஜய்க்கு அவ்வளவு தான் அங்கு மரியாதை'- அதிரடி காட்டும் கே.ராஜன்

`ஆந்திராவில் `வாரிசு' 35% ரிலீஸாகும்; விஜய்க்கு அவ்வளவு தான் அங்கு மரியாதை'- அதிரடி காட்டும் கே.ராஜன்

`ஆந்திராவில் `வாரிசு' 35% ரிலீஸாகும். விஜய்க்கு அவ்வளவு தான் அங்கு மரியாதை' என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.ராஜன், ``விஜய்யும், அஜித்தும் பெரிய ஹீரோக்கள். அதில் விஜய்க்கு 300 தியேட்டர் அஜித்துக்கு 800 தியேட்டர் கொடுக்க மாட்டார்கள். அது மனசாட்சி இல்லாத செயல். இருவருக்கும் 50-50 தியேட்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். இரண்டு பேரும் பவர்ஃபுல் ஹீரோக்கள். திரைப்படத் தொழிலை காப்பாற்றுகிற ஊர் ஆந்திரா. அதனால் அந்த ஹீரோ, அந்த முதலாளி அவர்கள் போட்ட முதலை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். விஜய்யின் வாரிசு படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது, தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் பாலகிருஷ்ணா படம் இங்கே ரிலீஸ் ஆகவில்லை. அதனால் அங்குள்ள முதலீட்டை காப்பாற்ற வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் நினைக்கிறது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு. இயக்குநர் தெலுங்கு. தெலுங்கு திரையுலகில் ஹீரோக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். தமிழ் ஹீரோக்களுக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை உயர்த்தி கொடுத்து தமிழ் சினிமா மார்க்கெட்டை கெடுத்தால் எப்படி?

இந்த ஹீரோ தமிழகத்தில் 25 கோடி குறைவாக கொடுத்தால் வாங்குவாரா? தமிழில் வாங்குகிற சம்பளத்தைவிட தமிழ் ஹீரோவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் 25 கோடி ரூபாய் கூடுதலாக கொடுப்பது ஏன்? தமிழில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தை விட தெலுங்கு தயாரிப்பாளர் 25% உயர்த்திருக்கிறார். ஏன் அப்படி செய்தார்? அவரை வைத்து தமிழ் தயாரிப்பாளர் படம் எடுக்கும்போது இவ்வளவு பெரிய தொகையை அவருக்கு கொடுக்க முடியுமா? என்னுடைய கவலை அதுதான். வேறு ஒன்றும் இல்லை.

எங்கள் ஹீரோ விஜய் படம் நன்றாக ஓட வேண்டும். அஜித் படம் நன்றாக ஓட வேண்டும். தெலுங்குக்கு போய் அவங்க மார்க்கெட்டை கெடுக்க அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் விரும்பவில்லை. அதற்காக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் நடித்துள்ள வாரிசு படம் நிச்சயம் அங்க ரிலீஸ் ஆகிறது. வாரிசு ரியல் தெலுங்கு படம் கிடையாது. தமிழகத்தில் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும். இந்த எண்ணம் நடிகர்களுக்கு கிடையாது. இப்போது தெலுங்கில் போய் சண்டை போடுகிறார்கள். வாரிசு 35% அங்கு ரிலீஸ் ஆகும். விஜய்க்கு அவ்வளவு தான் அங்கு மரியாதை. இங்கே 50-50 படம் ரிலீஸ் ஆகும். அஜித் படமும், விஜய் படமும் இங்கு நன்றாக ஓடும். அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று இரண்டு மாதத்திற்கு முன்பு சொல்லிவிட்டார்கள். இப்போது அவர்கள் அறிவிக்கவில்லை. பொங்கலுக்கு இரண்டு பெரிய ஹீரோக்கள் படம் வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பேட்டையும், விஸ்வாசமும் ஒன்றாக ரிலீசானது. இந்த ரெண்டு படங்களும் நன்றாக ஓடியது. கைதி, பிகில் படம் இரண்டு ஒன்றாக ரிலீஸ் ஆனது. இந்த படங்களும் நன்றாக ஓடியது. இந்த பொங்கலுக்கு விஜய் படம், அஜித் படம் நன்றாக ஓடும். எங்களுக்கு எல்லா ரசிகர்களும் ஆதரவு தருகிறார்கள். ஆந்திராவை கொண்டு இங்கே சேர்க்காதீர்கள். அங்கு தமிழ் ஹீரோக்கள் போனதே தவறு. தமிழ் சினிமாப் பட தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். நீங்கள் போய் தெலுங்குக்கு சென்று காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அங்கு நன்றாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஹீரோக்கள் நன்றாக ஒத்துழைப்பு தருகிறார்கள். அந்த ஒத்துழைப்பை இங்கே தர கற்றுக் கொள்ளுங்கள்" என்று கடுமையாக கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in