பெயரால் எந்தப் படமும் ஜெயிக்காது: தயாரிப்பாளர் கே.ராஜன்

பெயரால் எந்தப் படமும் ஜெயிக்காது: தயாரிப்பாளர் கே.ராஜன்
’ரஜினி’ பட பாடல் வெளியீட்டு விழாவில்...

பெயரால் எந்த படமும் ஜெயிக்காது, நல்ல கதை இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கூறினார்.

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரித்துள்ள படம், ’ரஜினி’. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் சத்யா, ஷெரீன் ஜோடியாக நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், ஏ.சி. சண்முகம், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், டி. சிவா, நடிகர் ஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ரஜினி - விஜய் சத்யா, ஷெரின்
ரஜினி - விஜய் சத்யா, ஷெரின்

விழாவில், தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ’ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள். பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது. கதை இல்லாவிட்டால் எந்த பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது. கதை தான் முக்கியம். ஏ.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார். சேலை கட்டிய தமிழ்ப் பெண்ணாக மாறுங்கள். தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும்’ என்றார்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசும்போது, இந்தப் படத்தின் டிரைலர், காட்சிகள் அருமையாக இருக்கிறது. நடிகர் தனுஷுடன் நடித்தவர்கள் அம்மாவாக கூட நடிக்க முடியாமல் இருக்கும் போது அவருடன் நடித்த ஷெரீன், புதுமுக நாயகி போல் அழகாக இருக்கிறார். நல்ல கலைஞர்கள் இணைந்து மிக பிரமாண்ட படைப்பாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.