‘இரக்கமின்றி அழுத்தம் கொடுத்த சிவகார்த்திகேயன்!’

நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு
‘இரக்கமின்றி அழுத்தம் கொடுத்த சிவகார்த்திகேயன்!’

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 4 கோடி ரூபாய் சம்பளம் பாக்கி தராததால் சம்பளம் பாக்கி தர உத்தரவிட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஞானவேல்ராஜா சார்பில் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கும் ஞானவேல்ராஜா, இயக்குநராக ராஜேஷ்தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் அந்தப் படம் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

‘அந்தப் படத்தால் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வரிகளுடன் சேர்த்து மீதம் 2.40 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென சிவகார்த்திகேயன் இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார். விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்துவிட வேண்டாம் என்றும் கூறினார்’ என்றும் அந்த மனுவில் ஞானவேல்ராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.